மகிழ்ச்சியான நாட்கள்
அந்த நாட்கள் நெ/மகிழ்ச்சியானவை இன்று தீபாவளி. காலையில் என் மனைவி உஷா, தலையில் காய்ச்சிய நல்லெண்ணையை வைத்த போது, அம்மா அப்பாவின் நினைவு வந்தது. "சீதா கல்யாணம் வைபோகமே", "கௌரி கல்யாணம் வைபோகமே" என்று அம்மா பாட, அப்பா தலையில் எண்ணெய்யை வைத்து தேய்த்து விடுவார். அவரின் குண்டு தொப்பை, அப்பொழுது அசையும் விதமே ஒரு அழகு தான். அக்கா தேவி, அத்திம்பேருடன் இரண்டு எவர்சில்வர் அடுக்கு நிறைய பட்சணங்களுடன், காலை 9 மணி சுமாருக்கு வருவாள். ஒன்றில் மைசூர் பாகு மிக்சர் முதலிய பல்வேறு பட்சணங்களும் மற்றொன்றில் விதவிதமான பஜ்ஜி வகையறாக்களும் இருக்கும். அது வரும் வரையில் நாங்கள் அனைவரும் (அம்மா, அப்பா, நான், நாலு அண்ணன்கள், தங்கை கீதா மற்றும் மன்னிகள்) காத்திருப்போம். மகிழ்ச்சியான அந்த நாட்கள் திரும்ப வரப்போவதில்லை என்றாலும் மனத்தில் நிரந்தர சந்தோஷத்தை கொடுத்தவை அவை. நேற்றைக்கு முந்தைய நாள் அம்மாவின் 'சிரார்த்தம்' சென்னையில் முடித்துவிட்டு வரும்பொழுது, கீதா 'சரோஜா மாமியின் பையன் குமார் தயார் செய்தது' என்று ஒரு மிக்சர் பொட்டலத்தை கொடுத்தாள். அதை இன்று பிரித்ததும் சுவை மிகுந...