மும்மொழிக் கொள்கை
புதிய தேசியக் கல்வியில் மும்மொழிக் கொள்கை புதிய தேசியக் கல்வியில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தாய் மொழி மற்றும் ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பு முதல் தங்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழியையும் கற்க வேண்டும் என்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. எனது எண்ணங்கள்: 1. இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் மற்ற மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் தங்கள் மாநில மொழியை அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கின்றன. CBSE பள்ளிகளில் முதல் மொழி ஆங்கிலம் ஆகவும் இரண்டாம் மொழி தமிழ் தவிர French German Hindi Sanskrit என பல மொழிகளில் கற்க வாய்ப்பு தரப்படுகிறது. இதனால் வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியாத சூழ்நிலை தான் இப்போது நிலவுகிறது. மும்மொழிக் கொள்கை வருமானால் இங்கு வசிக்கும் வேறு மாநிலத்தவர்களும் மற்ற மாநிலங்களில் வசிக்கும் நம் தமிழினத்தவரும், தங்கள் தாய் மொழியை, ஆங்கிலத்துடனும் அந்தந்த மாநில மொழியுடனும் சேர்ந்து கற்க வாய்ப்பு கிடைக்கும். 2. எல்லா மாநிலத்தவர்களும் அவரவர் மாநிலங்களிலேயே வசித்துவிடும் வாய்ப்பு கிடைப்பதி...