மும்மொழிக் கொள்கை

 புதிய தேசியக் கல்வியில் மும்மொழிக் கொள்கை

புதிய தேசியக் கல்வியில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தாய் மொழி மற்றும் ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பு முதல்  தங்களுக்கு விருப்பமான ஒரு இந்திய மொழியையும் கற்க வேண்டும் என்பது விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. 

எனது எண்ணங்கள்:

1. இந்தியாவின் அனைத்து மாநிலத்தவரும் மற்ற மாநிலங்களிலும் வசிக்கிறார்கள். எல்லா மாநிலங்களும் தங்கள் மாநில மொழியை அரசுப் பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கின்றன. CBSE பள்ளிகளில் முதல் மொழி ஆங்கிலம் ஆகவும் இரண்டாம் மொழி தமிழ் தவிர French German Hindi Sanskrit என பல மொழிகளில் கற்க வாய்ப்பு தரப்படுகிறது. இதனால் வேறு மாநிலங்களில் வசிப்பவர்கள், தங்கள் தாய்மொழியை கற்க முடியாத சூழ்நிலை தான் இப்போது நிலவுகிறது. மும்மொழிக் கொள்கை வருமானால் இங்கு வசிக்கும் வேறு மாநிலத்தவர்களும் மற்ற மாநிலங்களில் வசிக்கும் நம் தமிழினத்தவரும், தங்கள் தாய் மொழியை, ஆங்கிலத்துடனும் அந்தந்த மாநில மொழியுடனும் சேர்ந்து கற்க வாய்ப்பு கிடைக்கும். 

2. எல்லா மாநிலத்தவர்களும் அவரவர் மாநிலங்களிலேயே வசித்துவிடும் வாய்ப்பு கிடைப்பதில்லை. திறமைக்கு வாய்ப்புகளுக்கேற்ப, பல மாநிலங்களில் சென்று வாழ்கிறோம். மத்திய அரசு ஊழியர்கள், பல மாநிலங்களில் சென்று பணி புரியும் கட்டாயத்துக்குள்ளாகிறார்கள். தொழில் புரிவோரும், தங்கள் தொழிலின் வாய்ப்புக்கு ஏற்றபடி பல மாநிலங்களில் வசிக்கிறார்கள். தாய்மொழி ஆங்கிலம் இவற்றுடன் ஒரு மொழி கற்பதனால், அந்த மொழி பேசப்படும் மாநிலங்களில் சென்று பணி புரிவதும், தொழில் புரிவதும் எளிதாகிறது. மேலும் ஒரு மாநிலத்தில் தயாரிக்கப்படும் ஒரு பொருள் பல மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக ஒரு மொழி கற்கும் போது, தங்கள் தயாரிப்பை பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லுவதுடன், அதனை விற்பதற்கான திறமையும் அதிகரிக்கின்றது.

3. 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலம் இங்கு கற்பிக்கப்படுகிறது. அதனால் எல்லாம் அழியாத தமிழ், கூடுதலாக ஒரு மொழி கற்பதன் மூலம் அழிந்துவிடப் போவதில்லை. மாறாக இன்னும் நன்கு வளரும். 

4. 53% மாணவர்கள், அரசு பள்ளிகளில் கற்பதில்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இந்தத் தனியார் பள்ளிகளில் தமிழ் கட்டாயமில்லை. இரயில் நிலையங்களிலும், அரசு நிறுவனங்களிலும் இந்திப் பலகையை அழிப்பவர்கள், தமிழ் கற்பிக்கப்படாத அல்லது மூன்று மொழி கட்டாயம் உள்ள தனியார் பள்ளிகளின் முன்பு தர்ணா செய்வார்களா? பெரும்பாலான பள்ளி மாணவர்கள் இன்னொரு மொழி கற்கும்போது, அரசு பள்ளி மாணவர்கள் ஏன் ஒதுக்கப்பட வேண்டும்?

5. மக்கள் தொகையினுள் வயது மாற்றத்தினால் வரும் பொருளாதார பயன்கள் (Demography Dividend):

இந்தியாவில் அடுத்து வரும் பல தலைமுறைகளில் உழைக்கும் வர்க்க மக்கள் தொகை மற்ற மக்கள் தொகைகளை விட (படிப்பவர்கள் வயதானவர்கள்) கூட இருக்கும் என்றும், அதனால் நமது பொருளாதார வளர்ச்சி, மற்ற நாடுகளை விட பன்மடங்கு இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் அந்தப் பொருளாதார வளர்ச்சி கிடைக்க வேண்டுமானால் நம் நாடு கல்வி, உடல் நலம், சுகாதாரம், வேலைவாய்ப்பு, மக்களுக்கு கூடுதல் அதிகாரம் அளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். தவறினால், இந்த மக்கள் தொகை விகிதமே, திறமை இல்லாத சமூகமாக மாறி,  நாட்டை வறுமையில் ஆழ்த்தி விடும். எனவே இவை அனைத்திலும், குறிப்பாக கல்வியின் தரத்தை, மேன்மேலும் உயர்த்த எல்லா நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

6. அறுபதுஆண்டுகளுக்கு முன்பிருந்த கல்வி நிலை இன்று இல்லை. புத்தகங்கள் கொண்டும், ஆசிரியர் துணை கொண்டும் மட்டுமே படித்த காலம் இன்று இல்லை. கணினி யுகத்தில் வீட்டிலிருந்து கல்வி, கூட்டுக் கல்வி, ஆன்லைன் கல்வி என இணையத்தின் பரவலான பயன்பாட்டை சார்ந்து இருக்கும் கல்வி முறையாகும். நுழைவுத் தேர்வுகளான UPSC CSE, IIT JEE, IIM CAT, CA,  GATE, CLAT, NEET என்று பல தேர்வுகளில் தமிழக மாணவர்கள் , அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருகிறார்கள். எனவே புதிய தேசியக் கல்வியும் மற்றும் அதனுடன் இணைந்த தங்களுக்குப் பிடித்த மூன்றாம் மொழியை ஆறாம் வகுப்பு முதல் தேர்ந்தெடுத்தல், இக்கால மாணவர்களுக்கு நிச்சயம் சாத்தியமே. நமது கல்வித்தரம் உயர வேண்டுமானால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மிகச்சிறந்த கல்வி முறையுடன் ஒத்துப் போவதே சாலச் சிறந்ததாகும்.

7. மும்மொழிக் கொள்கை கட்டாயம் வேண்டும், ஒரு சிறிய திருத்தத்துடன். மூன்றாம் மொழியில், படிக்கவும் எழுதவும் அடிப்படை கற்பித்தலுடன் நிறுத்திவிட்டு, பேச்சு மொழிக்கு  முக்கியத்துவம் கொடுத்தால், மூன்றாம் மொழி மாணவர்களுக்கு பாரமாக இருக்காது. சுலபமாகவே இருக்கும். 

மொழி, வயது, மதம், பொருளாதாரம் எண்ணங்கள் என அனைத்திலும் வித்தியாசப்படும் நாம் அனைவரும், இந்தியன் என்ற ஒரு நினைவில் இணைகிறோம். மற்ற மாநிலத்தவர் உடன் தோளொடு தோள் சேர்ந்து நிற்கிறோம். புதிய தேசியக் கல்வியையும், தொலை நோக்குடன் நன்கு யோசித்து அங்கீகரிப்போம்.

தமிழ் வளர்ப்போம், கல்வித் தரம் மேம்படுத்துவோம், ஒன்றிணைந்த இந்தியன் என்ற தேசிய சிந்தனையுடன்.

வாழ்த்துகள்

வெ. விஸ்வநாதன் 

27.02.2025

Summary of the above article in English

1. Significant number of people from other states have migrated as residents in all the states in India. The infiltration of migrant employees/ workers/ labourers came to light during COVID and this situation continues even now. Persons working in central government/public sector undertakings/ private companies with all India presence get transferred frequently among different states.

2. All Indians coming under the above migrant category invariably do not know how to write/read in their mother tongue (though they converse at home) as the migrant states made 'learning regional language of the state is mandatory'.

3. To avoid unemployment/under employment, lacs of people continue to grab opportunities in other states for jobs/ profession/ new entrepreneurship and their children are unable to increase their talents in their mother language. (Since learning local language is mandatory in state schools)

4. More than 98% of agricultural produce and goods manufactured in India are sold within India meaning most of the sales happening in neighbourhood states/upcountry. Spoken knowledge of other Indian languages will be of immense help to further their sales.

5. Students studying in private schools number more than 50% of total students. English is their first language and the second language includes french, german, hindi, sanskrit apart from tamil.

6. Learning other languages including hindi can be tried as an option (not mandatory) in state run schools. Those who are willing can join. 

7. NEP should be welcomed as learning a third language is no longer confined to hindi. It includes other Indian languages. And the education of the third language starts only from sixth standard. Since learning a language other than mother tongue and English is more for conversing with people, the main thrust should be on the spoken language, while teaching only the basics in read/write.

Tamil, the most ancient language, survived the co-existence of Sanskrit in the olden times and the dominance of the colonial English language as the official language in the state for the last 300 years. It will survive and grow much more vigorously notwithstanding any encouragement of the other Indian languages to grow in the state 

God bless all.

V. Viswanathan.


Comments

  1. நமது தலை எழுத்து , இ‌‌ந்த மாதிரி மாற்றத்தை அமுல் படுத்தும் உரிமை கற்ற அறிவாளிகளிடம் இல்லை. கல்வி அறிவுயற்ற அரசியல்வாதிகள் கையில்😩😩

    ReplyDelete
  2. Very thought provoking article Sir, with solid reasoning to espouse the cause of 3 language policy.

    I see the issue from a different angle, and hope to expand the field of discussion.

    1. I saw an interview of famed Singer Smt.K.S.Chitra, where she says that though she learnt Hindi in school, it was not helpful at all for her while singing Hindi playback songs. The reason she explained was that the learning was not useful, because it was just another subject and there was no opportunity to speak it in her state. On the other hand, I know many people who had not learnt , say, Malayalam, but can now read, write and converse fluently in the language, merely because their jobs took them to Kerala. Hence, the child can learn languages later on if hèr career depends on the same.

    2. Coming to the central point of the current subject, let us consider whether it is beneficial for a child. It is well proven that learning an additional language does improve the cognitive skills of a child. Hence, teaching 2 languages is good. However, there is absolutely no conclusive evidence that learning 3 or more languages improves or increases the cognitive and learning outcomes. If the languages taught are not used in the social circle of the child, it can be a cruel imposition on the little one.

    3. During the formative years of the child in primary school, the hours of schooling are limited. It would be better to use this time to teach them good values through moral science, motor skills (using hands etc) classes by way of story-telling in the mother tongue. A recent speech given by Mrs.Sudha Narayanamurthy in the Rajya Sabha brought this aspect up very nicely.

    4. Some children may have a gift for learning languages and may want to become linguists. This aptitude can be detected maybe by 6th standard or so, and it would be fine if schools can offer not only a 3rd language but a few more too to nurture the Child's talent. These days, many courses are offered online and good language (as well as other subject) courses can be taken by the child in middle or high school. They can be tested online and the marks gained can be used to give additional credits to the child, which can be an added advantage while seeking admissions for higher courses.

    5. Learning 3 or more languages is not a guarantee that the rich culture of our country or for that matter national integration would automatically happen. A completely illiterate prson can also display these qualities.

    6. On a personal note, I could mot read Tamil well till a few years back, when our dear Bhama gently guided me to read Tamil books etc. Today, I feel elated that I could read your entire piece in one go!

    Regards,
    Lakshmi.


    ReplyDelete
    Replies
    1. I agree. Reading and writing do not help in conversing freely. That is why I have suggested in para 7 that the new policy be to be more focussed on spoken language (பேச்சு மொழி) and the children can find this method of learning very interesting.
      2. The new policy aims to bring the third language from 6th standard onwards only.
      3. I find persons from the other states at a disadvantage in learning their mother tongue since almost all states make the state's language compulsory in schools. 3rd language may address this issue.
      4. Illiterates and common man exhibit national integration better. My comments were directed against 'blockers' by arousing regional sentiments.

      Thank you for always being an active reader and bringing value addition always.

      Delete
  3. I totally agree spoken Language skills should be emphasized more when it comes to third language.
    I personally find Hindi very very useful while travelling all over India.
    I feel so much at home anywhere in India since I speak Hindi fluently.
    Being a NRI and living in Dubai we have Indians from All states and UT here. Everyone speaks Hindi except few Tamils. Infact Hindi unifies us.
    NEP problem in Tamilnadu is pure politics. The irony of our state is few illiterate politicians dominate the discourse on education policy.Hopeless situation.

    ReplyDelete
    Replies
    1. The above comment is from myself Abirami Sundar .

      Delete
  4. Abirami Sundar
    I agree with you Sir.
    But I do not want to be politically correct by saying any Indian language as 3rd language.
    It should be Hindi
    I feel Hindi is the connecting language among Indians.
    In TN language policy should be
    Tamil - scholarly level
    English - scholarly level
    Hindi - functional level
    As a teacher I can say children can pick up 3 languages easily.
    Their grasp is too good at lower classes
    As they reach board exam stage , exams could be only in 2 languages .Not in Hindi.
    But Sir , do you think DMK guys don't know the importance of Hindi as a connecting link?.
    They purposely deny it to Tamil kids because they don't want us to feel connected with Bharat, India
    Divide and Rule policy....
    Better to put kids for Hindi Prachar sabha classes.
    They are the best.

    ReplyDelete
    Replies
    1. Bold and daring but perfectly true state of affairs. Thank you

      Delete

Post a Comment

Popular posts from this blog

IBC resolutions and haircuts

An open letter

என்னை பண்படுத்திய தருணங்கள்