தமிழக முதல்வர் வெற்றி பெற....
தமிழகத்தின் புதிய முதல்வர் வெற்றி பெற ஏற வேண்டிய படிக்கட்டுகள் தமிழகத்தின் முதல்வராக திரு. C. ஜோசப் விஜய் பொறுப்பேற்றிருக்கிறார். இவருக்கும் மற்றவர்கள் முதல்வராக பதவியேற்றதற்கும் உள்ள மூன்று முக்கிய வித்தியாசங்களாக நான் காண்பது. 1. 60 வருடங்களாக தமிழகத்தை ஆண்ட இரண்டு மாநில கட்சிகள் வேண்டாம் என்ற எதிர்மறை ஒட்டுகள். இவரது தமிழ் படங்களில் வெளிப்படுத்திய நடிப்பால் ஈர்க்கப்பட்டு ரசிகர்களானவர்களின் நேர்மறை ஓட்டுகள். முதல் முறையாக வாக்களிக்கும் உரிமை பெற்ற இளைஞர்களின் ஓட்டுகள். வாக்களிக்கும் உரிமை பெறாத 5-18 வயதுக்கு உட்பட்ட பால் மணம் மாறா சிறுவர்-சிறுமியர்களின் வற்புறுத்தலால் வீட்டு பெரியவர்கள் அளித்தவை. சிறுபான்மை வகுப்பினரில் பெரும்பாலோர் அளித்த வாக்குகள். ஆக, நேர்மறை பாதி, மற்ற கட்சியினரின் மீதான எதிர்மறையில் பாதி என்று அவர் வாக்குகளை கணக்கிடலாம். பழைய வலி நிவாரணிகள் பயன் தராததால் 'புதிய நிவாரணி' நாடி இருக்கிறோம். அது ஒரு 'மாற்று' மட்டும் தானா அல்லது 'வாராது வந்த மாமணியா' என்பதை புதிய முதல்வரின் செயல்கள் தீர்மானிக்கும். 2. அவர் படங்களின் கதாநாயகன...